தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்
தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகின்றன. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.
இலக்கியத்தில் இசைக்கருவிகளின் பட்டியல்
[தொகு]“ | விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி, நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில், மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தும்பின், இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு, விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ, நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை, கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,[1]. |
” |
என மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
[தொகு]- ஆகுளி
- இடக்கை
- இலயம்
- உடுக்கை
- ஏழில்
- கத்திரிகை
- கண்டை
- கரதாளம்
- கல்லலகு
- கல்லவடம்
- கவிழ்
- கழல்
- காளம்
- கிணை
- கிளை
- கின்னாரம்
- குடமுழா
- குழல்
- கையலகு
- கொக்கரை
- கொடுகொட்டி
- கொட்டு
- கொம்பு
- சங்கு
- சச்சரி
- சலஞ்சலம்
- சல்லரி
- சிலம்பு
- தகுணிச்சம்
- தக்கை
- தடாரி
- தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
- தத்தளகம்
- தண்டு
- தண்ணுமை
- தமருகம்
- தாரை
- தாளம்
- துத்திரி
- துந்துபி
- துடி
- தூரியம்
- திமிலை
- தொண்டகம்
- நரல் சுரிசங்கு
- படகம்
- படுதம்
- பணிலம்
- பம்பை
- பல்லியம்
- பறண்டை
- பறை
- பாணி
- பாண்டில்
- பிடவம்
- பேரிகை
- மத்தளம்
- மணி
- மருவம்
- முரசு
- முரவம்
- முருகியம்
- முருடு
- முழவு
- மொந்தை
- யாழ்
- வட்டணை
- வீணை
- வீளை
- வெங்குரல் [2]
தோல்கருவிகள்
[தொகு]- பொரும்பறை
- சிறுபறை
- பெருமுரசு
- சிறுமுரசு
- பேரிகை
- படகம்
- பாடகம்
- இடக்கை
- உடுக்கை
- மத்தளம்
- சல்லிகை
- காடிகை ? கரடிகை
- திமிலை
- தக்கை
- கணப்பாறை
- தமடூகம்
- தண்ணுமை
- தடாரி
- அந்தரி
- முழவு
- முரசு
- சந்திர வளையம்
- மொந்தை
- பாகம்
- உபாங்கம்
- துடி
- நாளிகைப்பறை
- தமுக்கு
- உறுமி மேளம்
- பறை
- முரசு
- தம்பட்டம்
- தமருகம்
- நகரா
- மண்மேளம்
- தவண்டை
- ஐம்முக முழவம்(குடமுழவு)
- நிசாரளம் ? நிசாளம்
- துடுமை
- அடக்கம்
- தகுனிச்சம்
- தூம்பு
- பேரிமத்தளம்
- கண்விடு
- துடுகை
- உடல்
- உருட்டி
- சன்னை
- அரைச்சட்டி
- கொடுகொட்டி
- அந்தலி
- அமுதகுண்டலி
- அரிப்பறை
- ஆகுளி
- ஆமந்தரிகை
- ஆவஞ்சி
- உடல் உடுக்கை
- எல்லரி ஏறங்கோள் கோதை
- கண்தூம்பு
- கணப்பறை கண்டிகை
- கல்லல் கிரிகட்டி
- குண்டலம் சடடை
- செண்டா
- சிறுபறை
- தகுனித்தம்
- தட்டை
- தடாரி
- பதவை
- குளிர்
- கிணை
- துடி
- பம்பை
காற்றுக் கருவிகள்
[தொகு]- புல்லாங்குழல்
- முகவீணை
- மகுடி
- சங்கு
- தாரை
- நாதசுவரம்
- கொம்பு
- ஒத்து
- எக்காளம்
- கொக்கறை
- நமரி
- திருச்சின்னம்
- தூம்பு
- வயிர்
நரம்புக் கருவிகள்
[தொகு]கஞ்சக் கருவிகள், தட்டுக் கருவிகள்
[தொகு]- கைமணி
- தாளம் அல்லது பாண்டில்
- நட்டுவாங்கம்
- கஞ்சம் அல்லது கைத்தாளம்
- கொண்டி
- கடம்
- சேமக்கலம்
- தட்டுக்கழி
மிடறு
[தொகு]- இசைத் தூண் - மதுரை, சுசீந்திரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மலைபடுகடாம். 2-11
- ↑ திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழர் இசைக்கருவிகள்
- தமிழரின் மறுமலர்ச்சி! - அறிஞர் அண்ணா